

விஜய் டிவி நடிகையின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நம்ம வீட்டு பொண்ணு தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் வைஷாலி தனிகா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் மகராசி தொடரிலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
மேலும் பிரபல விஜய் தொலைக்காட்சி தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸில் முதலில் ஐஸ்வர்யா வேடத்தில் நடித்தவர் இவர் தான். இந்த நிலையில் அவருக்கும் சத்ய தேவ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தாலி கட்டும்போது அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கண் கலங்கியபடி இருக்கிறார். இதனையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.