ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பிரபல ஹீரோ படத்தில் நடிக்கும் 'பாண்டியன் ஸ்டோர்' நடிகை

பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லையாக நடிக்கும் காவ்யா, நடிகர் பரத் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

News image
Updated On :7 செப்டம்பர் 2021, 5:56 am

DIN

பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லையாக நடிக்கும் காவ்யா, நடிகர் பரத் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரானது, ரசிகர்கள் விரும்பி பார்க்கும் தொடர்களில் மிக முக்கியமானது. இந்த தொடரில் கதாநாயகியாக நடித்திருந்த சித்ரா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. 

4 அண்ணன், தம்பிகளுக்கு இடையே நடக்கும் பாசப்போராட்டம் தான் இந்தத் தொடரின் கதை. நாளுக்கு நாள் புதிய திருப்பங்கள், உணர்ச்சி மிகுந்த காட்சிகள் என இந்தத் தொடர் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து வருகிறது. இந்தத் தொடரில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு சமூக வலைதளங்களில் புதிய பக்கங்களை உருவாக்கி கொண்டாடி வருகின்றனர். 

Story image

இந்த நிலையில் இந்தத் தொடரில் முல்லையாக நடிக்கும் காவ்யா,  பரத் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் வாணி போஜன் கதாநாயகியாக நடிக்கிறார்.

Story image

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ஆக்ஸெஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக நடிகர் பரத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.