''நமக்கு அடி ஒன்னும் புதுசு இல்ல.. '' - சினிமா கதாநாயகி ஆன பின் ரச்சிதா புலம்பல்

நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் இருந்து விலகுவதாக வெளியான செய்திக்கு, நடிகை ரச்சிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். 
''நமக்கு அடி ஒன்னும் புதுசு இல்ல.. ''  - சினிமா கதாநாயகி ஆன பின் ரச்சிதா புலம்பல்
Updated on
2 min read

நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் இருந்து விலகுவதாக வெளியான செய்திக்கு, நடிகை ரச்சிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். 

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமானவர் ரக்ஷிதா மஹாலட்சுமி. இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்து வருகிறார்.

இந்தத் தொடரில் இவரது நடிப்புக்கென தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இந்த நிலையில் இவர் கன்னட படமொன்றில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதனையடுத்து இவர் இந்தத் தொடரில் இருந்து விலகுவதாக தகவல் பரவியது.

இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்துள்ள அவர், அதே மாடி, அதே கதவு, அதே வீடு, மறுபடியுமா? நான் எங்கேயும் செல்லவில்லை. இங்கேயே தான் இருக்கிறேன். ஆனால் இல்லை.

என்னால் இப்பொழுது எதுவும் சொல்ல முடியாது. அதனால் போகிற வரை போவோம். தானாக நின்றது என்றால் பார்த்துக்கொள்ளலாம். அதுவரை என்னை நிம்மதியாக இருக்க விடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இதனை ஒரு பெரிய செய்தியாக்குவதால் யாருக்கும் எந்தப் பலனும் இல்லை. நான் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரை விட்டு விலகுவதாக சொல்லி என்னை நீங்களே அனுப்பிவிடுவீர்கள் போலயே ? நமக்கு அடி ஒன்றும் புதிது இல்லை. என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். என்னை ஆதரிக்க நீங்கள் இருக்கிறீர்கள் என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com