மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' எப்போது வெளியாகிறது தெரியுமா ?

சூர்யா நடித்து வரும் 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படத்தின் வெளியீடு குறித்து தகவல் பரவிவருகிறது. 

Published On :

சூர்யா நடித்து வரும் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் வெளியீடு குறித்து தகவல் பரவிவருகிறது. 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இந்தப் படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். டி.இமான் இந்தப் படத்துக்கு இசையமைக்க, ரத்னவேலு இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். 

டாக்ஸிவாலா நாயகி பிரியங்கா ஜவல்கர் போட்டோஷூட் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. சூர்யாவின் 40வது படமான இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க, நடிகர் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த மாதம் இறுதியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவைடந்து விடும் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து எதற்கும் துணிந்தவன் படம் வருகிற கிறிஸ்துமஸ் வெளியீடாக வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'அண்ணாத்த' படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் பொங்கல் தினத்தன்று வெளியாகிறது.

ஒரே சமையத்தில் இரு படங்களை சன் பிக்சர்ஸ் வெளியிட்டால் இரண்டு படங்களின் வசூலும் பாதிக்கப்படும். இதனால் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இந்தப் படம் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.