லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய மலையாள படமான சுருளி திரைப்படம் கடந்த நவம்பர் 19 ஆம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த நிலையில் சுருளி படத்தின் சென்சார் செய்யப்படாத பதிப்பு ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளதாக தணிக்கைக் குழு தெரிவித்துள்ளது. சில மாற்றங்கள் கூறி தணிக்கை குழுவால் இந்தப் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க | பிக்பாஸ் ப்ரமோவில் பாவனி அருகில் இருப்பது யாரென்று தெரிகிறதா?
இந்த நிலையில் இந்தப் படத்தில் தணிக்கைக் குழுவால் தடை செய்யப்பட்ட சில தகாத வார்த்தைகளுடன் இந்தப் படம் ஒளிபரப்பாகி வருகிறது. அதாவது தணிக்கை செய்யப்படாத பதிப்பு தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளதாக தணிக்கைக் குழு குற்றம்சாட்டியுள்ளது.
நீஸ்டிரீம் நிறுவன மாநில தலைவர் சார்லஸ் ஜார்ஜ் இதுகுறித்து தெரிவித்ததாவது, ஓடிடி தளங்களுக்கு சென்சார் சான்றிதழ் தேவையில்லை. திரையரங்குகளில் வெளியாகும் படங்களுக்கு மட்டுமே தணிக்கை சான்றிதழ் தேவை என்று தெரிவித்துள்ளார்.