
பிசாசு-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான 'பிசாசு' திரைப்படம் பெரிய வெற்றியடைந்ததைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்திற்கான பேச்சவார்த்தை நடைபெற்று வந்தது.
பின் முழுக்கதையும் தயாரான பின்பு நடிகை ஆண்ட்ரியாவை நாயகியாக வைத்து பிசாசு - 2 திரைப்படத்தை இயக்கி வந்த நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது.
இதையும் படிக்க | மீண்டும் கதை திருட்டு சர்ச்சையில் இயக்குநர் ஷங்கர்: கார்த்திக் சுப்புராஜின் உதவியாளர் புகார்
கடந்த ஆண்டு தனது பிறந்த நாளன்று பிசாசு-2 படம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட மிஷ்கின் 2020 டிசம்பரில் படப்பிடிப்பைத் தொடங்கினார். நாயகியாக நடிகை ஆண்ட்ரியா நடிக்க கார்த்திக் ராஜா இந்தத் திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் . பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தில் அண்ட்ரியாவுடன் பூர்ணா , ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். மேலும் விஜய் சேதுபதி கவுரவ தோற்றதில் ஒரு காட்சியில் வருகிறார்.
முன்னதாக பிசாசு-2 திரைப்படத்தின் முதல்பார்வை கடந்த ஆக-3 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.