அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வசந்த பாலன் இயக்கும் ’அநீதி’ படத்தின் டீசர் வெளியீடு

இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் மற்றும் துஷாரா விஜயன் நடிக்கும் படத்தின் முதல் பார்வை டீசர் இன்று( செப்டம்பர் 10) வெளியானது.

News image
வசந்த பாலன் இயக்கும் ’அநீதி’ படத்தின் டீசர் வெளியீடு
Updated On :10 செப்டம்பர் 2021, 6:14 am

DIN

இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் மற்றும் துஷாரா விஜயன் நடிக்கும் படத்தின் முதல் பார்வை  டீசர் இன்று( செப்டம்பர் 10) வெளியானது.

ஆக்‌ஷன் திரில்லர் பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு'அநீதி' எனப் பெயரிடப்பட்டுள்ளது.  இப்படத்தின் படபிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. 

இதையும் படிக்க | வெளியானது ‘அண்ணாத்த’ முதல் பார்வை

ஜெயில் படத்துக்குப் பிறகு இயக்குநர் வசந்த பாலன் இயக்கும் அநீதிபடத்தில் அர்ஜூன் தாஸ், 'சார்பட்டா பரம்பரை' புகழ் துஷாரா விஜயன் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். 

இந்தப் படத்தில் 'நேர்கொண்ட பார்வை' வில்லன் அர்ஜூன் சிதம்பரம், ஜேஎஸ்கே சதிஷ்குமார், ஷா ரா, பிக்பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தி, அறந்தாங்கி நிஷா, வனிதா விஜயகுமார், பவா லட்சுமணன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

இந்தப் படத்தை அர்பன் பாய்ஸ் புரொடக்சன் நிறுவனம் தயாரிக்கிறது. 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.