3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன்: முக்கியத் தகவலை பகிர்ந்த படக்குழு

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துவிட்டதாக புதிய போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது. 

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 6:47 pm IST

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துவிட்டதாக புதிய போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது. 

கல்கியின் வரலாற்று புதினத்தை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கி வரும் படம் பொன்னியின் செல்வன். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். 

இந்தப் படத்துக்கு ஜெயமோகன் வசனம் எழுதுகிறார். ஜெயம் ரவி இந்தப் படத்தில் அருள் மொழி வர்மனாகவும், கார்த்தி வந்தியத்தேவனாகவும் நடிக்கின்றனர். ஐஸ்வர்யா ராய் நந்தினி என்ற வேடத்திலும், த்ரிஷா குந்தவையாகவும் நடிக்கின்றனர். பிரகாஷ் ராஜ் சுந்தர சோழராக நடிக்கின்றார். 

சமீபத்தில் கார்த்தி ஜெயம் ரவியைக் குறிப்பிட்டு, இளவரசே என் பணியும் முடிந்து விட்டது என்றும் த்ரிஷாவைக் குறிப்பிட்டு, நீங்கள் இட்ட ஆணை நிறைவேற்றப்பட்டது. என்றும் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளத்த ஜெயம் ரவி, வந்தியத் தேவரே, பணிகளை சிறப்பாக செய்வதில் உங்களுக்கு நிகர் நீங்களே என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததுவிட்டதாக தயாரிப்பு நிறுவனம் புதிய போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது. மேலும் இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.