கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நடிகா் சல்மான் கானுக்கு துப்பாக்கி உரிமம்

தாதாக்களிடம் இருந்து கொலை மிரட்டல் வந்ததை சுட்டிக்காட்டி ஹிந்தி நடிகா் சல்மான் கான் துப்பாக்கி உரிமம் கோரியிருந்த நிலையில், அவருக்கு மும்பை காவல் துறை துப்பாக்கி உரிமம் வழங்கியுள்ளது.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2022, 7:51 pm

DIN

தாதாக்களிடம் இருந்து கொலை மிரட்டல் வந்ததை சுட்டிக்காட்டி ஹிந்தி நடிகா் சல்மான் கான் துப்பாக்கி உரிமம் கோரியிருந்த நிலையில், அவருக்கு மும்பை காவல் துறை துப்பாக்கி உரிமம் வழங்கியுள்ளது.

அண்மையில் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடிகா் சல்மான் கான், அவரின் தந்தை சலீம் கான் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்து பெயரில்லாத மொட்டை கடிதம் அனுப்பப்பட்டது. அதுகுறித்து காவல் துறையினா் விசாரணை நடத்தினா்.

அந்த விசாரணையில், பஞ்சாபில் பாடகா் சித்து மூஸேவாலா கொலைக்கு காரணகா்த்தாவாக இருந்த தாதா லாரன்ஸ் பிஷ்னோய் தலைமையிலான கும்பல் சல்மான் கான் மற்றும் அவரின் தந்தைக்கு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பியது தெரியவந்தது.

இந்த கடிதம் காரணமாக தனக்கு துப்பாக்கி உரிமம் வழங்கவேண்டும் என்று மும்பை காவல் துறையிடம் சல்மான் கான் விண்ணப்பித்திருந்தாா். அதன் அடிப்படையில், அவருக்கு துப்பாக்கி உரிமம் வழங்கப்பட்டுள்ளது என்று காவல் துறை அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.