இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பிற நடிகர்களுடன் நடிகர் அஜித்தை ஒப்பிட்டு பேசிய ரன்பீர் - வைரலாகும் விடியோ

நடிகர் அஜித்குமாரிடம் பிடித்த விஷயங்கள் குறித்து ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர் பகிர்ந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

News image
Updated On :25 ஆகஸ்ட் 2022, 5:38 am

DIN

நடிகர் அஜித்குமாரிடம் பிடித்த விஷயங்கள் குறித்து ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர் பகிர்ந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

ரன்பீர் கபூர் - ஆலியா இணைந்து நடித்த பிரம்மாஸ்திரா (தமிழில் பிரம்மாஸ்திரம்) வருகிற செப்டம்பர் 9 ஆம் தேதி திரைக்குவரவுள்ளது. புராண கதைகளை அடிப்படையாகக் கொண்டு மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்குநர் ராஜமௌலி வெளியிடுகிறார். 

மேலும் அமிதாப் பச்சன் மற்றும் நாகர்ஜுனா இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்திய அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை இந்தப் படம் ஏற்படுத்தியுள்ளது. 

பிரம்மாஸ்திரா படத்தைப் பிரபலப்படுத்தும் நோக்கில் ரன்பீர், இயக்குநர் ராஜமௌலி, நாகர்ஜுனா உள்ளிட்டோர் சென்னை வந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். 

வழக்கமாக பிற மொழி திரை பிரபலங்களிடம் கேட்பது போல அஜித் பற்றி சொல்லுங்கள், விஜய் பற்றி சொல்லுங்கள் என ரன்பீரிடம் தொகுப்பாளர் கேட்டார். அஜித் குறித்து பதிலளித்த ரன்பீர், அவர் சிறந்த மனிதர். அவரை திரைப்படங்களில் மட்டுமே பார்க்க முடியும். மற்ற படி அவரது புகைப்படங்களைக் கூட பார்க்க முடிவதில்லை. விமான நிலைய புகைப்படங்கள் கூட நமக்கு கிடைப்பதில்லை. 

நிறைய நடிகர்கள் அப்படி இல்லை. இப்போதிருக்கும் சமூக வலைதள யுகத்தில் அவர் இப்படி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு சூப்பர் ஸ்டார் என்பதைத் தாண்டி அவரிடம் இந்த விஷயங்கள் எனக்கு பிடித்திருக்கிறது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.