பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஓடாத படத்துக்கு வெற்றி விழாவா? ரசிகர்கள் கிண்டல்! 

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘டிஎஸ்பி’ படத்தின் வெற்றி விழாவை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். 

Published On :

விஜய் சேதுபதி கடைசியாக நடித்த 'கடைசி விவசாயி', விக்ரம், 'மாமனிதன்' ஆகிய படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றன.

தற்போது, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘சீமாராஜா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் ‘டிஎஸ்பி’ என்கிற படம் வெளியானது.  டி.இமானின் இசையமைப்பில் உதித் நாராயணன் பாடிய இப்படத்தின் முதல் பாடலான ‘நல்லா இரும்மா’ பாடல் நல்ல வரவேற்பினை பெற்றது. 

Story image

நேற்று ரிலீஸ் ஆன இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வரத்தொடங்கியது. இந்நிலையில் இந்தப் படத்தின் வெற்றி விழா கொண்டாடியுள்ளனர் படக்குழுவினர். நடிகர் விஜய் சேதுபதி இயக்குநருக்கு வாழ்த்து தெரிவிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

Story image

இந்தப் புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள், “ஒரே நாளிலே வெற்றி விழாவா?”, “படம் எப்போ ரிலீஸ் ஆச்சு?”, “ஓடாத படத்துக்கு வெற்றி விழாவா?”, “துணிவு அப்டேட் இருந்தா சொல்லுங்க”, “பொய் சொல்றதுக்கு அளவே இல்லையா?” என மீம்ஸ்களை கமெண்ட் செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.