சந்திரலேகா சீரியல் ஸ்வேதாவுக்கு திருமணம்!
நடிகர் அஜித் குமாரின் ஆழ்வார் படத்தில் நடித்த ஸ்வேதா பண்டேகருக்கு திருமணம் நடைபெற உள்ளது.


நடிகை ஸ்வேதா பண்டேகர் ஆழ்வார் படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்தவர். பின்னர் சில படங்களில் துணை நடைகையாக நடித்துள்ளார். இவரது சன் டிவி சீரியலில் வெளியான ‘சந்திரலேகா’ பெரும் ஹிட் அடித்தது. இந்த வருடம் அக். 8அம் நாள் இந்த சீரியல் முடிவடைந்தது.
சன் டிவி, ஜீ டிவிகளில் பல தொடர்களில் நடித்துள்ள இவருக்கும் சன் மியூசிக் தொகுப்பாளர் முருகன் என்பவருக்கும் தற்போது திருமணம் நடைபெற உள்ளது.
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “எனது இதயம் நீண்ட நாளாக தொலைந்து போய்விட்டது. நன்றி கடவுளே. தற்போது கிடைத்து விட்டது” என பதிவிட்டுள்ளார்.

மேலும் இருவர்களும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அதன் புகைப்படங்கள் அவர்களது இன்ஸ்டா பக்கத்தில் காணக்கிடைகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...