மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

இன்ஸ்டாகிராமில் ‘ரஞ்சிதமே’ பாடலின் சாதனை! 

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல் இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை படைத்துள்ளது. 

News image
Updated On :17 டிசம்பர் 2022, 9:21 am

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல் இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை படைத்துள்ளது. 

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் வாரிசு படத்தில் இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ளது. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்துக்கு இசை - தமன். ஷியாம், சரத்குமார், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட முக்கியமான நடிகர்கள் பலர் இப்பட்டத்தில் இணைந்து நடித்துள்ளனர். 

சமீபத்தில்  'வாரிசு' படத்தில் இடம்பெற்றுள்ள 'ரஞ்சிதமே' பாடலின் லிரிக்கல் விடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், விஜய், மானசி இணைந்து பாடிய இப்பாடல் இதுவரை யூடியூப்பில் 9.7கோடிக்கும் அதிகமான (97 மில்லியன்) பார்வைகளைக் கடந்து சாதனை படைத்து வருகிறது. இதனால், விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். சிம்பு குரலில் வெளியான ‘தீ தளபதி’ பாடல் யூடியூபில் 2.4கோடி (24 மில்லியன்) பார்வையாளர்களை கடந்துள்ளது. 

இந்நிலையில், விஜய்- மானசி குரலில் வெளியான ரஞ்சிதமே பாடல் இன்ஸ்டாகிராமில் 100 ஆயிரம் ரீல்ஸ்களை தாண்டி ரசிகர்களால் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. படத்தின் 3வது பாடலுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.