வாடகைத் தாய் மூலம் குழந்தை: பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் அறிவிப்பு
நடிகை பிரியங்கா சோப்ரா - பாப் பாடகர் நிக் ஜோனஸ் இணை வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளதாக இன்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளனர்.


நடிகை பிரியங்கா சோப்ரா - பாப் பாடகர் நிக் ஜோனஸ் இணை வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளதாக இன்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளனர்.
கடந்த 2000-வது ஆண்டில் உலக அழகிப் பட்டம் வென்ற பிரியங்கா சோப்ரா, தமிழில் விஜய் நடித்த 'தமிழன்' திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து, பாலிவுட்டில் கால் பதித்த அவர் ஏராளமான ஹிட் படங்களைக் கொடுத்து ஹாலிவுட் வரை பயணத்தை நீட்டித்துக்கொண்டார்.
இவர் கடந்த 2018-இல் தன்னைவிட 10 வயது இளையவரான பாப் பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில், பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் இணை வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளனர்.
இந்தத் தகவலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பிரியங்கா சோப்ரா, குடும்பத்தின் மீது கவனம் செலுத்தவுள்ள இந்த சிறப்பான தருணத்தில் தங்களது தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். குழந்தையின் பாலினம், பெயர் உள்ளிட்ட மற்ற தகவல் எதையும் இருவரும் வெளியிடவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...