மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விக்ரம் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

மிகுந்த  எதிர்பார்ப்புக்கு இடையே நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடேயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

News image
Updated On :4 ஜூன் 2022, 11:50 am

DIN

மிகுந்த  எதிர்பார்ப்புக்கு இடையே நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடேயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதிரடியான சண்டைக்காட்சிகளும் சில திருப்புமுனைகளும் நிறைந்த இப்படத்தில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்கிற கதாப்பாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

நடிகர்கள் ஃபஹத் ஃபாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டோரின் அசத்தலான நடிப்பும் படத்தின் மதிப்பைக் கூட்டியுள்ளது.

இந்நிலையில், ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான ‘விக்ரம்’ திரைப்படம்  தமிழகத்தில் வெளியான முதல்நாளில் (வெள்ளிக்கிழமை) ரூ.20.61 கோடியை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் அத்தகவல்களில், இப்படம் முதல் நாளில் இந்திய அளவில் ரூ.32 கோடியையும் உலக அளவில் ரூ.48.68 கோடியையும்  வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இந்தாண்டில் வெளியான தமிழ்ப் படங்களில் முதல் நாளில் அதிக வசூலைப் பெற்ற பீஸ்ட் மற்றும் வலிமை திரைப்படத்திற்கு அடுத்த இடத்தில்  ‘விக்ரம்’ இடம்பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.