சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நேற்று (பிப்ரவரி 10) திரையரங்குகளில் வெளியானது. முதல் நாளில் இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இந்த நிலையில் இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி இந்தப் படம் தமிழக அளவில் முதல் நாளில் ரூ.9 கோடி வசூலித்துள்ளதாம். உலக அளவில் மொத்தமாக ரூ.15 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க | பேரானந்தம்னா என்ன தெரியுமா ? தனுஷ் குறித்து செல்வராகவன் பதிவு
இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், வினய், எம்.எஸ்.பாஸ்கர், சூரி, புகழ், ராமர், தங்கதுரை, சூப்பர் குட் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. ஜெய் பீமைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ளார்.