விமானத்துக்கு நேரமாச்சு...காலிப் பேருந்தில் உடற்பயிற்சி செய்த ஹிந்தி நடிகை (விடியோ)
பிரபல நடிகையும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஷில்பா ஷெட்டி காலிப் பேருந்தில் உடற்பயிற்சி செய்த விடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.


பிரபல நடிகையும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஷில்பா ஷெட்டி காலிப் பேருந்தில் உடற்பயிற்சி செய்த விடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
விமானத்திற்கு நேரமானதால், ஓடும் பேருந்தில் ஷில்பா ஷெட்டி சிறிது நேரம் உடற்பயிற்சி செய்தார். இந்த விடியோவை இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்ததைத் தொடர்ந்து ரசிகர்கள் உடற்பயிற்சியில் அவருக்கு உள்ள பகிர்ந்து வருகின்றனர்.
பேஷன் வீக் நிகழ்ச்சியில் நடிகை ஷில்பா ஷெட்டி கலந்துகொண்டு வீடு திரும்பினார். அதற்காக விமானத்தைப் பிடிக்க பேருந்தில் பயணம் செய்துள்ளார். பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததாலும், விமானத்துக்கு நேரமானதாலும் பேருந்திலேயே உடற்பயிற்சி செய்தார். இதனை விடியோ பதிவு செய்த ஷில்பா, மண்டே மோடிவேஷன் என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் பகிந்துள்ளார். அவருடைய இந்த விடியோவிற்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் அதிக ஆர்வம் செலுத்தும் ஷில்பா ஷெட்டியின் உடற்பயிற்சி ஆர்வத்துக்கு இது ஒரு எடுத்துக்காட்டாக உள்ளதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...