
அனந்நாக் (ஜம்மு காஷ்மீர்) : நாட்டில் வெறுப்பை பரப்பும் விதத்தில் எடுக்கப்பட்ட 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தை தடை செய்ய வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா கூறினார்.
விவேக் அக்னிஹோத்ரி அவர்களால் இயக்கப்பட்ட படம் தி காஷ்மீர் ஃபைல்ஸ். காஷ்மீர் இந்துக்கள் முஸ்லிம்களால் கொலை செய்யப்படுவதாக எடுக்கப்பட்ட இப்படத்திற்கு பாரதிய ஜனதாக் கட்சி வரி விலக்கு அளித்தது குறிப்பிடத்தக்கது.
“முஸ்லிம் இந்துவை கொலை செய்து அந்த இரத்தத்தால் அரிசியை கழுவி தனது மனைவியை சாப்பிட சொல்வதாக தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தில் காட்டப்படுகிறது. இது உண்மை நிகழ்வென காட்டப்படுகிறது. அடிப்படை ஆதாரம் அற்ற இந்த படம் நாட்டு மக்களிடையே வெறுப்பை மட்டும் விதைக்காமல் பள்ளத்தாக்கின் இளைஞர்களை எவ்வாறு இந்த உலகம் பார்க்கும்? அதனால் ஆதாரமற்ற இந்தப் படத்தினை தடை செய்ய வேண்டும்” என்று முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.