மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரஷியாவில் வெளியானது ‘கைதி’ திரைப்படம்

கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் ரஷியாவில் இன்று வெளியானதாக அப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :19 மே 2022, 6:36 am

DIN

கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் ரஷியாவில் இன்று வெளியானதாக அப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற திரைப்படம ‘கைதி’.

இந்தப் படம் ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில்   ‘போலா’ என்ற பெயரில் ரீமேக்காகி வருகிறது. தமிழில் கைதி படத்தை தயாரித்த டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம், அஜய் தேவ்கன் ஃபிலிம்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறது. இந்தப் படத்தை தர்மேந்திரா சர்மா இயக்குகிறார். 

இந்நிலையில், கைதி திரைப்படம் ரஷியாவில் இன்று வெளியாகியுள்ளது. அங்குள்ள 121 நகரங்களில் 297 திரைகளில் இப்படம் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.