இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

இரு மொழிகளிலும் தனுஷ் பாடும் பாடல் (விடியோ)

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் பாடலை பாடி அசத்தும் நடிகர் தனுஷின் வைரல் விடியோ. 

News image
Updated On :8 நவம்பர் 2022, 12:18 pm

DIN

'திருச்சிற்றம்பலம்', 'நானே வருவேன்' படங்களுக்கு பிறகு தனுஷ் தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் 'வாத்தி' படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் சார் என்ற பெயரில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உடன் தனுஷ் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பாடலை பாடும் விடியோவை பதிவிட்டுள்ளார். தமிழில் பாடலை எழுதியவர் தனுஷ். தெலுங்கில் ராமஜோகையா சாஸ்திரி எழுதியுள்ளார். தனுஷ் , ஸ்வேதா இணைந்து பாடியுள்ளதாகவும் இந்த மெலோடி உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் எனவும் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். 

இந்தப் பாடல் நவ.10ஆம் தேதி வெளியாகுமென்பது குறிப்பிடத்தக்கது. 'வாத்தி' திரைப்படம் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டு  இருந்தது. ஆனால் தற்போதுவரை படத்தின் பணிகள் முடிவடையாததால் வெளியீட்டு தேதி மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.