2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
/

இயக்குநர் மணிரத்னத்தின் அடுத்த பட ஹீரோ இவரா ?

இயக்குநர் மணிரத்னத்தின் அடுத்த படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :13 அக்டோபர் 2022, 11:42 am

DIN

இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. இருப்பினும் இந்தப் படம் இதுவரை ரூ.400 கோடிக்கும் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

விரைவில் இந்தப் படம் ரூ.500 கோடி வசூலைத் தாண்டும் என்று திரையுலக வட்டாரத்தினர் கணித்துள்ளனர். முதல் பாகத்திலேயே பட்ஜெட்டை விட 40 சதவிகிதம் அதிகம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. 

Story image

பொன்னியின் செல்வன் பட 2 ஆம் பாகம் வருகிற அடுத்த ஆண்டு கோடை காலத்தில் வெளியாகும்  என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இப்பட இறுதி கட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன. 

இந்த நிலையில் இயக்குநர் மணிரத்னத்தின் அடுத்தப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தளபதி படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை மணிரத்னம் இயக்கவிருக்கிறாராம் இதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்றுவருகிறது.

லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறதாம். பொன்னியின் செல்வன் 2 படம் வெளியாகும்போது மணிரத்னம் - ரஜினிகாந்த் இணையும் படம் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.