டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!யுஜிசி - நெட் தேர்வுக்கான விடைக்குறிப்பு விரைவில் வெளியீடு!கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

பிரபல நகைச்சுவை நடிகருக்கு அபிஷேகம் செய்த சிம்பு ரசிகர்கள்!

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தைப் பார்க்க வந்த பிரபல நகைச்சுவை நடிகருக்கு சிம்பு ரசிகர்கள் மாலை அணிவித்து தண்ணீர் ஊற்றி தங்களின் ஆரவாரத்தை வெளிப்படுத்தினர்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:49 pm IST

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தைப் பார்க்க வந்த பிரபல நகைச்சுவை நடிகருக்கு சிம்பு ரசிகர்கள் மாலை அணிவித்து தண்ணீர் ஊற்றி தங்களின் ஆரவாரத்தை வெளிப்படுத்தினர்.

விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடைமையடா  வெற்றிகளுக்குப் பிறகு 3-வது முறையாக இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனன், சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவான ‘வெந்து தணிந்தது காடு’ இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இப்படத்தை சிம்பு ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், அதிகாலைக் காட்சிக்கு சிம்புவின் நண்பரும் நகைச்சுவை நடிகருமான கூல் சுரேஷ் திரையரங்கம் வந்திருந்தார். 

அப்போது, மகிழ்ச்சியில் ரசிகர் ஒருவர் கூல் சுரேஷின் ஆடி காரின் முகப்புக் கண்ணாடியில் ஏறி அமர்ந்ததால் அதிக எடையால் கண்ணாடி உடைந்தது. 

பின்னர், வருத்தமாக உள்ளே சென்ற கூல் சுரேஷ் படம் முடித்து வெளியே வந்ததும் சிம்பு ரசிகர்கள் அவருக்கு மாலை அணிவித்து தண்ணீரை ஊற்றி அபிஷேகம் செய்வதுபோல் தங்களுடைய நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

தற்போது அந்த விடியோ வைரலாகி வருகிறது.

‘கூல் சுரேஷ்’ கடந்த சில மாதங்களாகவே வெந்து தணிந்தது காடு படத்திற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததாலும் அனைத்து படங்களுக்கும் தன் நகைச்சுவையான கருத்துக்களைச் சொல்வதாலும் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவர். குறிப்பாக அவருடைய ‘வெந்து தணிந்தது காடு ..சிம்புவுக்கு வணக்கத்தைப் போடு’ வசனம் அதிக முறை டிரெண்ட் ஆனது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.