‘இனிமேதான் எங்க கேம் ஆரம்பம்...’ : ராமராஜனின் சாமானியன் டீசர் வெளியானது!
10 ஆண்டுகளுக்கு பிறகு ராமராஜன் நடித்துள்ள ‘சாமானியன்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
தொன்னூறுகளில் முன்னணி நடிகராக இருந்த ராமராஜன், கடைசியாக 2012-ம் ஆண்டு வெளியான ‘மேதை’ படத்தில் நடித்திருந்தார். இப்போது அவர் மீண்டும் நாயகனாக நடிக்கும் படத்துக்கு ‘சாமானியன்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இது அவரது 45வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
ராமராஜன், ராதாரவி, எம்.எஸ். பாஸ்கர், மைம் கோபி உள்ளிடோர் நடித்துள்ள இப்படத்தின் டீசர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 4 மொழிகளில் வெளியாகியுள்ளது.
எட்சட்ரா என்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கிறார். இசை- அச்சு ராஜாமணி. கதை- வி கார்த்திக் குமார், திரைக்கதை, இயக்கம் - ஆர். ராஜேஷ்.
Related Article
'கேப்டன் மில்லர்': தனுஷுக்கு ஜோடியாகும் சிவகார்த்திகேயன் பட நடிகை
அஜித் - இயக்குநர் வினோத்தின் ஏகே 61 படத்தலைப்பு இதுவா? - வைரலாகும் பெயர்
வெற்றிமாறனின் விடுதலை: கொடைக்கானல் பகுதி படப்பிடிப்பு நிறைவு!
வெந்து தணிந்தது காடு: 4 நாளில் வசூல் 50 கோடிகளை தாண்டியது!
பிழைப்பில் மண் அள்ளிப் போடுகிற விமர்சனமா இது?: கெளதம் மேனன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

