விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இன்ஸ்டாகிராமில் பிக்பாஸ் அபிநய் பெயரை நீக்கிய மனைவி: உருவான விவாகரத்து சர்ச்சை

அபிநயின் மனைவி அபர்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அபிநய்யின் பெயரை நீக்கியிருப்பது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. 

News image
Updated On :4 ஜனவரி 2022, 11:04 am

DIN

ஜெமினி கணேசன் - சாவித்ரியின் பேரன் அபிநய், கணித மேதை ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அபிநய்யை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தும்போது ஜெமினி கணேசன் - சாவித்ரி குறித்த தனது நினைவுகளை ரசிகர்களிடையே கமல்ஹாசன் பகிர்ந்துகொண்டார். 

அபிநய்யிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை உள்ளது. இதனையடுத்து பிக்பாஸ் வீட்டில் பாவனியுடன் அவர் நெருங்கி பழகிய விதம் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒருமுறை ராஜு, அபிநய்யிடம், நீ பாவனியை காதலிக்கிறாயா என கேள்வி எழுப்பினார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாதியில் வெளியேறினார் அபிநய். அவரது மனைவி அவரை எப்பொழுதும் ஆதரிப்பதாக பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் அவரது மனைவி அபர்னா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பெயரை அபர்னா அபிநய் என்பதில் இருந்து திடீரென அபர்னா வரதராஜன் என மாற்றியுள்ளார். இதனால் இருவரும் விவாகரத்து செய்துகொள்ளவிருப்பதாக சர்ச்சை உருவானது. இருப்பினும் இருவரும் இதுகுறித்து விளக்கமளிக்கவில்லை.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.