பாலிவுட்டில் பாகுபலி 2 வசூலைத் தாண்ட முடியாத கேஜிஎஃப் 2

இந்தியாவில் அதிக வசூல் மற்றும் ரூ. 400 கோடியை அடைந்த ஹிந்திப் படங்களில் பாகுபலி 2, கேஜிஎஃப் 2 என இரு தென்னிந்தியப் படங்கள் உள்ளன. 
பாலிவுட்டில் பாகுபலி 2 வசூலைத் தாண்ட முடியாத கேஜிஎஃப் 2

இந்தியாவில் அதிக வசூலைப் பெற்ற பாகுபலி 2 (ஹிந்தி) பட வசூலைத் தாண்ட முடியாத நிலை கேஜிஎஃப் 2 (ஹிந்தி) படத்துக்கு ஏற்பட்டுள்ளது.

யஷ் நடிப்பில் 2018-ல் வெளியான கேஜிஎஃப் என்கிற கன்னடப் படம் இந்திய அளவில் கவனம் பெற்றது. மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. பிரஷாந்த் நீல் இயக்கியிருந்தார். கேஜிஎஃப் படத்தின் 2-ம் பாகம் தற்போது வெளியாகியுள்ளது. யஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ் போன்றோர் நடித்துள்ளார்கள். கேஜிஎஃப் 2 படம் கன்னடம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் அதிகமாக வசூலித்த 2-வது ஹிந்திப் படம் என்கிற பெருமையைப் பெற்ற கேஜிஎஃப் 2, ரூ. 400 கோடிக்கும் அதிகமான வசூலை எட்டியுள்ளது. இந்திய அளவில் எல்லா மொழிகளிலும் ரூ. 1000  கோடிக்கு அதிகமாகவும் உலக அளவில் ரூ. 1200 கோடிக்கு அதிகமாகவும் வசூல் செய்துள்ளது. 

இந்தியாவில் அதிக வசூல் மற்றும் ரூ. 400 கோடியை அடைந்த ஹிந்திப் படங்களில் பாகுபலி 2, கேஜிஎஃப் 2 என இரு தென்னிந்தியப் படங்கள் உள்ளன. 

ஹிந்திப் படங்களில் ரூ. 300 கோடி வசூலை எட்டிய படங்கள்: பிகே, பஜ்ரங்பைஜன், சுல்தான், டங்கல், டைகர் ஹிந்தா ஹை, பாகுபலி 2 , பத்மாவத், சஞ்சு, வார், கேஜிஎஃப் 2. இந்தப் படங்களில் ரூ. 500 கோடி வசூலைத் தாண்டிய ஒரே படம் - பாகுபலி 2 (ஹிந்தி) மட்டுமே. 

இந்தியாவில் அதிக வசூலைக் கண்ட ஹிந்தி படங்கள்

1. பாகுபலி 2 - ரூ. 510.99 கோடி
2. கேஜிஎஃப் 2 - ரூ. 430.95 கோடி (இதுவரை)
3. டங்கல் -  ரூ. 387.38 கோடி

இந்நிலையில் 5-வது வாரத்தில் கேஜிஎஃப் 2 (ஹிந்தி) படம் ரூ. 10.25 கோடி வசூலை எட்டியுள்ளது. நேற்று இதன் இந்திய வசூல், ரூ. 81 லட்சம் மட்டுமே. இதன்மூலம் இந்தியாவில் கேஜிஎஃப் 2 படத்தின் ஹிந்திப் பதிப்பு இதுவரை ரூ. 430.95 கோடி வசூலை அடைந்துள்ளது. இதன் வசூல் ஒவ்வொரு வாரமும் குறைந்து வருவதால் பாகுபலி 2 (ஹிந்தி) இந்தியாவில் அடைந்த ரூ. 510 கோடி வசூலை கேஜிஎஃப் 2 படத்தால் எட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகவல்களை பாலிவுட் விமர்சகர் தாரன் ஆதர்ஷ், ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். 

கேஜிஎஃப் 2 (ஹிந்தி): இந்திய வசூல்

2-வது நாள்: ரூ. 100 கோடி
4-வது நாள்: ரூ. 150 கோடி 
5-வது நாள்: ரூ. 200 கோடி 
7-வது நாள்: ரூ. 250 கோடி 
11-வது நாள்: ரூ. 300 கோடி
16-வது நாள்: ரூ. 350 கோடி
23-வது நாள்: ரூ. 400 கோடி 

கேஜிஎஃப் 2 (ஹிந்தி) ஒவ்வொரு வாரமும் பெற்ற வசூல்

முதல் வாரம்: ரூ. 268.63 கோடி (வியாழன் வெளியீடு, ஆகவே 8 நாள்கள்)
2-வது வாரம்: ரூ. 80.18 கோடி 
2-வது வாரம்: ரூ. 49.14 கோடி 
2-வது வாரம்: ரூ. 22.75 கோடி 
2-வது வாரம்: ரூ. 10.25 கோடி 

மொத்தம்: ரூ. 430.95 கோடி 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com