ஜவான் படத்திற்காக நடிகர் ஷாருக்கானுடன் 200 பெண் ஸ்டண்ட் கலைஞர்கள் சண்டையிட்ட காட்சி படமாக்கப்பட்டுள்ளது.
தமிழில் விஜய்யை வைத்து பிகில், மெர்சல், தெறி என்று மூன்று சூப்பர் ஹிட் படங்களைத் அட்லி, ஷாருக் கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகிறார்.
தற்போது, இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் மிகத் தீவிரமாக சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ’ஜவான்’ கிளைமேக்ஸ் சண்டைகாக நடிகர் ஷாருக்கான் பெண்களுடன் சண்டையிடும் காட்சி எடுக்கப்பட்டதாகவும் அதில் 200-க்கும் அதிகமான பெண் ஸ்டண்ட் கலைஞர்கள் மும்பையிலிருந்து சென்னை வந்து கலந்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இசை - அனிருத்.
மேலும், நடிகர் விஜய் கௌரவ தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆரணி பாலிடெக்னிக்கில் தொழில்நுட்ப கருத்தரங்கம்
‘சென்னை தினம்’ போட்டிகள்: ஆக. 18-க்குள் படைப்புகளை அனுப்பலாம்

சுதந்திர தின விழாவில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து: உயா்நீதிமன்ற பதிவுத் துறை உத்தரவு

அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சோ்ப்பதில் செய்தியாளா்களின் பணி அளப்பரியது : பிஐபி தென்மண்டல தலைமை இயக்குநா்
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



