பிரபல அமெரிக்க நடிகர் ஜானி டெப் மற்றும் அவருடைய முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்டுக்கும் இடையே நடந்த அவதூறு வழக்கு திரைப்படமாகிறது.
'பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்' படங்களில் 'ஜேக் ஸ்பாரோ' கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் புகழ்பெற்றவர் ஜானி டெப். அவர் நடிகை ஆம்பர் ஹெர்டை 2015இல் திருமணம் செய்து கொண்டார். பிறகு 2 ஆண்டுகள் கழித்து கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்துப் பெற்றனர்.
பின்னர் 2018-ல் ஆம்பர் ஹெர்ட் பிரபல பத்திரிக்கை ஒன்றில் பெண்கள் எவ்வாறு பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்கிற கட்டுரையில் தனது முன்னாள் கணவரான ஜானி டெப் மீது அவதூறுகளை எழுதினார். இதனால் ஜானி டெப்க்கு ஏராளமான அவமதிப்புகள் நடந்தது. அவருக்கு வரவேண்டிய படங்கள் தட்டிக்கழிக்கப்பட்டன. எனவே, அவர் நஷ்டஈடு கேட்டு ஆம்பர் ஹெர்ட் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
3 ஆண்டுகளாக நடைப்பெற்று வந்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் ஜானி டெப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானதுடன் ஆம்பர் ஹெர்ட் 10 மில்லியன் டாலரை இழப்பீட்டு தொகையாகவும் , 5 மில்லியன் டாலரை தண்டனைக்குரிய இழப்பீட்டு தொகையாகவும் மொத்தம் 15 மில்லியன் டாலரை ஜானிடெப்புக்கு வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
உலகம் முழுவதும் பெரிதும் கவனிக்கப்பட்ட இவ்வழக்கில் ஜானி டெப் வெற்றி பெற்றதுடன் அவருடைய மதிப்பும் படங்களில் நடிப்பதற்கான சம்பளமும் அதிகரித்தன.
இந்நிலையில், இந்த பிரபல வழக்கை திரைப்படமாக எடுக்க ஒரு தயாரிப்பு நிறுவனம் முன்வந்துள்ளது. ’ஹாட் டேக்: தி டெப் / ஹெர்ட் டிரைல்’ எனப்பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஜானி டெப்பாக மார்க் ஹெப்காவும் ஆம்பர் ஹெர்ட்டாக மேகன் டேவிஸூம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இப்படம் குறித்து ஜானி டெப் மற்றும் ஆம்பரிடமிருந்து கருத்துக்கள் எதுவும் வெளியாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிறுமியின் 7 மாத கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி

கிழக்கு இந்தியா முழுவதும் அடுத்த மாதம் பாஜக அரசுகள் - அமித் ஷா

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

உதயநிதிக்கு எதிரான வழக்கு: வருமான வரித்துறை பதில் மனு தாக்கல்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


