சென்னையில் நடந்த விருது விழாவில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரகுமான் தனது மனைவியிடம் ஹிந்தியில் பேச வேண்டாம் என மேடையில் கூறிய காணொலி வைரலாகி வருகிறது.
சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் ஏ.ஆர்.ரகுமான் தனது மனைவி சைரா பானுவுடன் கலந்து கொண்டார்.
இந்த விழாவில், மேடைக்கு வந்த ஏ.ஆர்.ரகுமானிடம் பேசிக் கொண்டிருந்த தொகுப்பாளர்கள், அவரது மனைவியையும் மேடைக்கு அழைத்தனர்.
அப்போது, தனது குரலை மனைவி விரும்புவதாகவும் அதனால் மீண்டும் மீண்டும் தனது பேட்டிகளை கேட்டுக் கொண்டிருப்பார் என்று ஏ.ஆர். ரகுமான் தெரிவித்தார்.
தொடர்ந்து, அவரது மனைவி சைரா பானு பேச மைக்கை எடுத்தபோது, ஹிந்தில பேசாதிங்க, தயவுசெய்து தமிழில் பேசுங்க என சிரித்தபடி தெரிவிக்க, அரங்கில் இருந்தவர்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்யத் தொடங்கினர்.
சைரா பானு பேசுகையில், எனக்கு தமிழ் சரளமாக பேச வராது. மன்னித்து விடுங்கள். நான் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன். இவரது குரல் எனக்கு மிகவும் பிடிக்கும் எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
த்ரிஷா நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படங்கள்!

அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!

கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

