
பாண்டவர் இல்லத்தின் நடிகர் நரேஷ் ஈஸ்வர் வானத்தைப் போல தொடரில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள் அதிக அளவிலான ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 8 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் வானத்தைப் போல தொடர் பலதரப்பட்ட ரசிகர்களைக் கொண்டுள்ளது. இதனால் சின்னத்திரை தொடர்களுக்கான டிஆர்பி பட்டியலில் டாப் 5 தொடர்களில் ஒன்றாக உள்ளது.
அண்ணன் - தங்கை பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இந்தத் தொடர், திருமணம் ஆன பிறகு அண்ணன், தங்கை உறவு சந்திக்கும் பிரச்னைகள் குறித்து விவரிக்கிறது.
இந்தத் தொடரில் பாண்டவர் இல்லம் தொடரில் நடித்துவரும் நரேஷ் ஈஸ்வர் நடிக்கவுள்ளார். பாண்டவர் இல்லம் தொடரும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பகல் நேரத் தொடராகும்.
நரேஷ் ஈஸ்வர் இதற்கு முன்பு சொந்த பந்தம், அவள் அப்படித்தான் உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார். தற்போது வானத்தைப்போல தொடரில் புதிய பாத்திரத்தில் அறிமுகமாகிறாரா அல்லது ஏற்கெனவே உள்ள பாத்திரத்திற்கு மாற்றாக நடிக்கவுள்ளாரா என்பது போன்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
சின்னத்திரை தொடர்களில் அடிக்கடி ஒரே பாத்திரத்திற்கு அடிக்கடி நடிகர்கள் மாறுவது வழக்கமாகிவருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.