தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

புதிய படம் குறித்து லெஜண்ட் சரவணன் அப்டேட்!

புதிய படம் குறித்து நடிகர் லெஜண்ட் சரவணன் தகவலை பகிர்ந்துள்ளார்.

News image
Updated On :15 ஆகஸ்ட் 2023, 9:31 am

DIN

புதிய படம் குறித்து நடிகர் லெஜண்ட் சரவணன் தகவலை பகிர்ந்துள்ளார்.

சரவணா ஸ்டோர் விளம்பரங்களில் கலக்கிய லெஜண்ட் சரவணன்  தி லெஜண்ட் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படத்தை உல்லாசம், விசில் போன்ற படங்களை இயக்கிய ஜேடி ஜெர்ரி இந்தப் படத்தை இயக்கியிருந்தனர். 

இந்தப் படம் கடந்தாண்டு ஜூலை 28-ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தில் மறைந்த நடிகர் விவேக் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அவ்வப்போது லெஜண்ட் சரவணன் ட்விட்டரில் பகிரும் புகைப்படங்கள் வைரலானது. இவரின் புதிய படத்துக்கான அப்டேட்டை பலரும் எதிர்பார்த்திருந்தனர்.

இந்நிலையில், சுதந்திர நாள் விழாவை குழந்தைகளுடன் கொண்டாடிய லெஜண்ட் சரவணன், புதிய படத்துக்கான கதை தயாராகிவிட்டதாகவும், விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Story image

தொடர்ந்து, ஜெயிலர் திரைப்படத்தில் வரும் பாடலுக்கு குழந்தைகளுடன் இணைந்து நடனமாடினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.