அமீர் கான், விஷ்ணு விஷாலுக்கு உதவிய அஜித்!

மிக்ஜம் புயலால் உருவான கனமழையால் பாதிக்கப்பட்ட நடிகர்கள் அமீர்கான் மற்றும் விஷ்ணு விஷாலுக்கு நடிகர் அஜித் உதவியிருக்கிறார்.
அமீர் கான், விஷ்ணு விஷாலுக்கு உதவிய அஜித்!
Published on
Updated on
2 min read

வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான, ‘எஃப்ஐஆர்’, ‘கட்டா குஸ்தி’ ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் வெற்றிப் படங்களாக அமைந்தன. 

தற்போது, 3 படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் சில படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன. 

மிக்ஜம் புயலால் 2 நாள்களாக கொட்டித் தீர்த்த அதி கனமழை ஓய்ந்த நிலையில், சென்னையின் பலப்பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல் சென்னை மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.

இதனால், சினிமா பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, நடிகர் விஷ்ணு விஷால் வசித்து வரும் காரப்பாக்கத்திலும் நீர் சூழ்ந்திருந்தது. இதனை, எக்ஸ் தளத்தில் தெரிவித்தவர் தனக்கு உதவும்படி அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார்.

தொடர்ந்து, அவர் இருக்கும் வீட்டை அடைந்த தமிழக தீயணைப்புப் படையினர் விஷ்ணு விஷால் மற்றும் அவரின் மனைவி ஜுவாலா கட்டாவை மீட்டனர். எதிர்பாராத விதமாக, பாலிவுட் நடிகர் அமீர்கானும் அதே பகுதியில் இருந்திருக்கிறார். அவரைத் தொடர்பு கொண்டவர்கள், பத்திரமாக அமீர் கானை மீட்டு விஷ்ணு விஷாலுடன் அழைத்து வந்தனர். 

மீட்கப்பட்டபின் அமீர்கானும் சென்னையில் இருந்தார் என்கிற செய்தி வேகமாகப் பரவத் துவங்கியது. இதனையடுத்து, நடிகர் விஷ்ணு விஷால் தன் எக்ஸ் தளத்தில், “ நாங்கள் இருந்த நிலையை பொதுவான நண்பர் மூலம் அறிந்துகொண்ட அஜித் சார், எங்கள் வில்லாவைச் சேர்ந்த 30 பேருக்கும் பயண வசதியை ஏற்படுத்திக் கொடுத்தார். எப்போதும் உதவும் மனப்பான்மையைக் கொண்டவர். லவ் யூ அஜித் சார்” எனப் பதிவிட்டதுடன் அஜித்குமார் மற்றும் அமீர்கானுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டார்.

இப்படம், உடனடியாக இந்திய அளவில் டிரெண்டிங் ஆனதுடன் வைரலாகியது. பலரும் அஜித் குமாரின் செயலைப் பாராட்டி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com