திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கோயம்பேடு சந்தையில் சண்டையிடும் சீரியல் நடிகை!

சென்னை கோயம்பேடு சந்தையில் சின்னத்திரை தொடருக்கான சண்டைக் காட்சி படப்பிடிப்பு நடந்துள்ளது. 

News image
Updated On :10 டிசம்பர் 2023, 2:00 pm IST

சென்னை கோயம்பேடு சந்தையில் சின்னத்திரை தொடருக்கான சண்டைக் காட்சி படப்பிடிப்பு நடந்துள்ளது. 

கோயம்பேடு சந்தையில் திரைப்படங்களுக்காக சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது திரைப்படங்களுக்கு இணையாக சின்னத்திரை தொடர்களிலும் சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக பலர் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் தொடர் ஆனந்த ராகம். இந்தத் தொடரில் நடிகை அனுஷா பிரதாப் முதன்மை பாத்திரத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக அழகப்பன் நடிக்கிறார். 

ஆனந்த ராகம் தொடரில் நாயகிக்கு அடிக்கடி சண்டைக் காட்சிகள் இடம்பெறும். இதனால், ஆனந்த ராகம் தொடரில் ஈஸ்வரி பாத்திரத்தில் நடிக்கும் அனுஷாவுக்கு அதிரடி நாயகி என்ற பெயரும் ரசிகர்கள் மத்தியில் உண்டு. 

சமீபத்தில் வெளியான முன்னோட்ட விடியோவிலும் கோயிலில் ரெளடிகளிடம் சிக்கிக்கொள்ளும் மாமியாரை புல்லட் வண்டியில் வந்து காப்பாற்றும் வகையில் அனுஷாவுக்கு காட்சிகள் இடம்பெற்றிருக்கும். 

சீரியல்களில் நாயகிகள் பெரும்பாலும் அழுவது, ஏமாற்றப்படுவதுபோன்று காட்டப்பட்டு வரும் நிலையில், இதுபோன்ற அதிரடி காட்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

Story image

அந்தவகையில், தற்போது சென்னை கோயம்பேடு சந்தையில் ஆனந்த ராகம் தொடருக்கான சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட விடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடிகை அனுஷா பகிர்ந்துள்ளார். 

கோயம்பேடு சந்தையில் ஆனந்த ராகம் படப்பிடிப்பு

கோயம்பேடு சந்தையில் ஆனந்த ராகம் படப்பிடிப்பு

அதில், கூட்டம் நிறைந்த பகுதியில் நடிகை அனுஷா, ரெளடிகளை விரட்டி விரட்டி அடிப்பது போன்று காட்சி இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சண்டைக் காட்சிகள் படமாக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

கோயம்பேடு சந்தையில், திரைப்படங்களுக்காக சண்டைக் காட்சிகள் படமாக்கப்படுவது வழக்கம். தற்போது திரைப்படங்களுக்கு இணையாக சீரியல்களும் படப்பிடிப்பு செய்து காட்சிகளை ரசிக்கவைப்பதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். 

சமீபகாலமாக திரைப்படங்களுக்கு இணையாக காதல் காட்சிகளும் சண்டைக் காட்சிகளும் சின்னத்திரை தொடர்களில் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.