மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

News image
Updated On :14 டிசம்பர் 2023, 10:31 am

DIN

இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

கண்ணகி

கண்ணகி படத்தில் நடிகைகள் அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலினி ஜோயா, கீர்த்தி பாண்டியன் ஆகியோர் நடித்துள்ளார்கள். நான்கு பெண்கள், நான்கு சூழ்நிலைகளை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. இப்படம் டிச.15ஆம் நாள் திரையரங்குகளில் வெளியாகிறது.

ஆலம்பனா

வைபவ் நாயகனாக நடித்துள்ள ஆலம்பனா திரைப்படம் டிச. 15ல் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் நாயகியாக பார்வதி நாயர் நடித்துள்ளார். பாரி கே விஜய் இப்படத்தை இயக்கியுள்ளார்.

ஃபைட் கிளப்

நடிகரும் இயக்குநருமான உறியடி விஜய் குமார் நடிக்கும் புதிய படம் 'ஃபைட் கிளப்'. அப்பாஸ் ரஹ்மத் இயக்கியுள்ள இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் தனது 'ஜி ஸ்குவாட்' நிறுவனம் மூலம் வெளியிடுகிறார். இப்படம் டிச.15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

தீதும் சூதும் எந்தன் முகவரி

இயக்குநர் ஜித்தா மோகன் இயக்கத்தில் ஸ்ரீகுமார் ஜெய், அங்கன ஆர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் தீதும் சூதும் எந்தன் முகவரி. இப்படம் நாளை(டிச. 15) திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த வாரம் ஓடிடி

சந்தனக் கடத்தல் வீரப்பன் குறித்த ‘கூச முனுசாமி வீரப்பன்’ என்கிற புதிய ஆவணப்படம் வெளியாகியுள்ளது. ஜீ5 ஓடிடி தளத்தில் இந்த ஆவணப்படம் இன்று வெளியாகியுள்ளது.

ஆங்கில மொழி வெப் தொடரான தி க்ரோன் சீசன் 6 பாகம் 2  டிச.14-ல் நெட்பிளிக்ஸிலும், ரீச்சர் சீசன் 2 டிச. 15-ல் அமேசான் ப்ரைமிலும் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.