கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

40 வயதிலும் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கும் சீரியல் பிரபலங்கள்!

சின்னத்திரையில் பிரபலமான நடிகை ஸ்ருதி ராஜ் புதிய தொடரில் நடிக்கவுள்ளார். அந்தப் புதிய தொடரில் ஸ்ருதிக்கு ஜோடியாக நடிகர் சஞ்சீவ் நடிக்கவுள்ளார். 

News image

ஸ்ருதி ராஜ் / சஞ்சீவ் (கோப்புப் படங்கள்)

Updated On :18 டிசம்பர் 2023, 9:42 am

DIN

சின்னத்திரையில் பிரபலமான நடிகை ஸ்ருதி ராஜ் புதிய தொடரில் நடிக்கவுள்ளார். அந்தப் புதிய தொடரில் ஸ்ருதிக்கு ஜோடியாக நடிகர் சஞ்சீவ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சின்னத்திரையில் பல தொடர்களில் நடித்ததன் மூலம் மக்கள் மனங்களைக் கவர்ந்த இருவர்,  புதிய தொடரில் இணைந்து நடிக்கவுள்ளது சின்னத்திரை ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தேவையானியின் கோலங்கள் என்ற தொடரில் பிரபா என்ற கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ருதி ராஜ் அறிமுகமானார். தென்றல் தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்து தனக்கான தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றார். 

Story image

2013ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆபீஸ் தொடரில் நடித்தார். இந்தத் தொடர் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

அதனைத் தொடர்ந்து அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், அழகு உள்ளிட்ட தொடர்களிலும் ஸ்ருதி ராஜ் நடித்துள்ளார். இதனால், சின்னத்திரையில் அசைக்கமுடியாத நடிகையாகவும் ஸ்ருதி மாறினார். தற்போது இவருக்கு 42 வயதாகிறது. புதிய தொடருக்காக உடல் எடையையும் அவர் குறைத்துள்ளார்.

நடிகர் விஜய்யுன் நெருங்கிய நண்பரான நடிகர் சஞ்சீவ், மெட்டி ஒலி தொடரில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அண்ணாமலை, ஆனந்தம், திருமதி செல்வம், யாரடி நீ மோகினி, சித்தி -2, வானத்தைப் போல உள்ளிட்ட 34 தொடர்களில் நடித்துள்ளார். 

Story image

தென்றல் தொடரில் நடிகை ஸ்ருதி ராஜுடன் ஏற்கெனவே துணைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது 48 வயதாகும் சஞ்சீவ், வானத்தைப்போல தொடரில் மிடுக்கான காவல் துறை அதிகாரியாக நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது ஸ்ருதி ராஜ் உடன் இணைந்து  இணைந்து முதன்மை பாத்திரத்தில் சஞ்சீன் நடிக்கவுள்ளார். 

தொடரின் பெயர் மற்றும் ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.