
நடிகர் அஜித்குமாரின் துணிவு திரைப்படத்தை பார்த்த முன்னாள் சிஎஸ்கே வீரர், படம் குறித்து விமர்சனத்தையும் வெளியிட்டுள்ளார்.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வெளியான திரைப்படம் துணிவு. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான இப்படம் உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதுவரை ரூ.250 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், முன்னாள் சிஎஸ்கே வீரருமான சுப்ரமணியம் பத்ரிநாத் நேற்று இரவு துணிவு படத்திற்கு சென்ற புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
இதையும் படிக்க | ‘லியோ’ படப்பிடிப்பு தளத்திலிருந்து விஜய் நடிக்கும் காட்சி கசிவு!
தொடர்ந்து, படம் பார்த்த பிறகு ‘ஹாலிவுட் ஒரு தமிழ் திரைப்படம்’ என்று விமர்சனத்தையும் பதிவிட்டுள்ளார்.
Oru Hollywood style Tamil Padam
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.