ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

’துணிவு’ வெளியானதும் அஜித் அழைத்து இதுதான் சொன்னார்: மஞ்சு வாரியர்

அஜித்தின் துணிவும் நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படமும் நேற்று திரையரங்குகளில்..

News image
Updated On :12 ஜனவரி 2023, 6:43 am

DIN

அஜித்தின் துணிவும் நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படமும் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இரு படங்களும் ஒரே நாளில் மோதிக்கொண்டதால்  இருவரின் ரசிகர்களும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

குறிப்பாக, துணிவு திரைப்படம் நள்ளிரவில் வெளியானதால் தமிழகம் முழுவதும் ரசிகர்கள் முந்தியடித்துக்கொண்டு குவிந்தனர். இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரசிகர்கள் ஒரே நேரத்தில் அதிக அளவில் குவிந்ததால் பொதுச்சொத்துக்களுக்கு சேதங்களும் ஏற்பட்டன.

அதனைத் தொடர்ந்து வாரிசு அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.

மேலும், தமிழகத்தில் முதல்நாள் வசூலில் துணிவு திரைப்படம் ரூ.17.5 கோடியையும் வாரிசு திரைப்படம் ரூ.17 கோடியையும் குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கேரளத்தில் இப்படத்தை ரசிகர்களுடன் கண்ட நடிகை மஞ்சு வாரியரிடம் ‘துணிவு வெளியான பின்பு அஜித் குமார் அழைத்தாரா?’ என கேள்வியெழுப்பட்டது. 

அதற்கு மஞ்சு வாரியர், ‘அஜித் சார் அழைத்தார். தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். மொத்த படக்குழுவும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.’ எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.