கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கமல்ஹாசன் வழங்கிய இன்ப அதிர்ச்சி: நெகிழ்ச்சி தெரிவித்த ‘காந்தாரா’ இயக்குநர்!

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு காந்தாரா படத்தினை குறித்த வாழ்த்து மடலை பரிசாக அனுப்பியுள்ளார் கமல்ஹாசன். 

News image
Updated On :14 ஜனவரி 2023, 7:35 am

DIN

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘காந்தாரா’. 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகிறார். ஆனால், அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்விக நிலத்தை பழங்குடியினரிடமிருந்து பறிக்க முயற்சிக்கும் கதையே இப்படம்.

கன்னட  வரவேற்பை தொடர்ந்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகி மொத்தம் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது.  காந்தாரா திரைப்படம் சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய 2 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் காந்தாரா இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டிக்கு வாழ்த்து மடல் எழுதியுள்ளார்.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ரிஷப் ஷெட்டி, “இந்திய சினிமாவின் லெஜெண்டிடம் இருந்து இந்தப் பாராட்டு வருவது மிகப்பெரியதாக கருதுகிறேன். இந்த அருமையான எதிரபாராத பரிசை பார்த்ததும் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. இந்த அரியப் பரிசினை கொடுத்ததற்கு நன்றி கமல் சார்” என பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.