யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மிருணாள் தாக்குர்?

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மிருணாள் தாக்குர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :1 ஜூலை 2023, 6:51 am

DIN

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மிருணாள் தாக்குர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்க்கு துப்பாக்கி, கத்தி, சர்கார் என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். அவர் அடுத்து விஜய்யுடன் படம் இயக்குவதாக இருந்தது. பின்னர் அந்த பேச்சுவார்த்தை கைவிடவே தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து படம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முருகதாஸின் கடைசிப் படமான தர்பார் படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்தது. சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்திற்கும் மோசமான விமர்சனங்கள் எழுந்தது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படம் முடிந்ததும் ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் நடிக்க உள்ளதாகவும், பான் இந்தியப் படமாக உருவாக உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

இதையும் படிக்க: மாவீரன் டிரைலர் நாளை!

ஆனால், மாவீரன் முடிந்ததும் சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயன் இணையும் படத்திற்கு மிருணாள் தாக்குரை நாயகியாக ஒப்பந்தம் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் அதற்கான தோற்றப் புகைப்படங்களும் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.