வெளியானது உதயநிதியின் மாமன்னன் பட டிரைலர்
உதயநிதி நடிப்பில் மாமன்னன் திரைப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.


உதயநிதி நடிப்பில் மாமன்னன் திரைப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.
பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களுக்குப் பின் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் மாமன்னன். இதில் உதயநிதி ஸ்டாலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபஹத் பாசில் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கிறார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நீண்ட நாள்களாக தயாரிப்பிலிருக்கும் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. ஏற்கெனவே படத்தில் வடிவேலு பாடிய ‘ராசாக்கண்ணு’ பாடல் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.
படம் வரும் ஜூன் 29ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில் படத்தின் டிரைலரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இதுவரை காமெடி கதாபத்திரங்களில் நடித்து வந்த வடிவேலு இந்த படத்தின் மூலம் முதன்முறையாக சீரியஸான கதாபாத்திரத்திற்கு மாறியிருப்பது தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...