விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

பிரேம்ஜியின் சத்தியசோதனை படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

பிரேம்ஜியின் சத்தியசோதனை படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Published On :2 பிப்ரவரி 2024, 12:43 am IST

பிரேம்ஜியின் சத்தியசோதனை படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரேம்ஜி நடிப்பில் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சத்தியசோதனை. சுரேஷ் சங்கையா ஒரு கிடாயின் கருணை மனு படத்துக்குப் பிறகு சத்தியசோதனை படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் பிரேம்ஜியுடன் பிக்பாஸ் ரேஷ்மா, ஸ்வயம் சித்தா, ஞானசம்பந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் லட்சுமி பாட்டி நடித்துள்ளார். சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை நகைச்சுவைக் கலந்து இப்படத்தை எடுத்துள்ளனர்.

இப்படத்தை சமீர் பரத் ராம் தயாரித்துள்ளார். ஆர்.பி. சரண் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், ரகுராம் இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார். சமீபத்தில், சத்தியசோதனை படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படம் ஜூலை 21 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.