விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

துலீப் கோப்பை: இஷான் கிஷன் அபாரம்; 708 ரன்கள் குவித்த கிழக்கு மண்டலம்!

துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய கிழக்கு மண்டலம் முதல் இன்னிங்ஸில் 708 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

Ishan Kishan

இஷான் கிஷன் - படம் | தமிழ்நாட்டு கிரிக்கெட் சங்கம் (எக்ஸ்)

Published On :7 செப்டம்பர் 2026, 7:42 pm IST

துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய கிழக்கு மண்டலம் முதல் இன்னிங்ஸில் 708 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்று வருகிறது. கிழக்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டலம் இடையேயான இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கிழக்கு மண்டலம் பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

இஷான் கிஷன் அபாரம்; 708 ரன்கள் குவித்த கிழக்கு மண்டலம்!

டாஸ் வென்று முதலில் விளையாடிய கிழக்கு மண்டலம் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 708 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

அந்த அணியில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் இஷான் கிஷன் இரட்டை சதம் விளாசி அசத்தினார். அவர் 334 பந்துகளில் 270 ரன்கள் எடுத்தார். அதில் 30 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, குமார் குஷாக்ரா சதம் விளாசியும், அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் ஷிகர் மோகன் அரைசதம் விளாசியும் அசத்தினர். குமார் குஷாக்ரா 101 ரன்கள், ஷிகர் மோகன் 85 ரன்கள், அபிமன்யு ஈஸ்வரன் 72 ரன்கள் எடுத்தனர். அனுகுல் ராய் 45 ரன்கள் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி 44 ரன்கள் எடுத்தனர்.

தெற்கு மண்டலம் தரப்பில் திரிபுரனா விஜய் 4 விக்கெட்டுகளையும், சமா வி மிலிண்ட் மற்றும் ஷ்ரேயாஸ் கோபால் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஷேக் ரஷீத் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் கிழக்கு மண்டலம் அதன் முதல் இன்னிங்ஸில் 708 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை எடுத்து ஆட்டமிழந்த நிலையில், நாளை (செப்டம்பர் 8) மூன்றாம் நாள் ஆட்டத்தில் தெற்கு மண்டலம் அதன் முதல் இன்னிங்ஸைத் தொடங்கவுள்ளது.

Summary

Batting first in the final of the Duleep Trophy cricket tournament, East Zone was bowled out for 708 runs in the first innings.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.