/

பியரா? விஸ்கியா? ரசிகரின் கேள்விக்கு ஸ்ருதி ஹாசன் பதில்

எந்த வகையான மதுவை குடிக்க விருப்பம் என ரசிகர் கேட்ட கேள்விக்கு நடிகை ஸ்ருதி ஹாசன் பதிலளித்துள்ளார்.

News image
Updated On :17 மார்ச் 2023, 9:07 am

DIN

எந்த வகையான மதுவை குடிக்க விருப்பம் என ரசிகர் கேட்ட கேள்விக்கு நடிகை ஸ்ருதி ஹாசன் பதிலளித்துள்ளார்.

ஸ்ருதி ஹாசன் தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இறுதியாக அவர் நடிப்பில் வெளியான ‘வால்டர் வீரய்யா’, ’வீரசிம்மா ரெட்டி’ ஆகிய படங்கள் வசூல் ரீதியாக வெற்றிப் படமாக அமைந்ததால் தனக்கான மார்க்கெட்டை ஸ்ருதி தக்க வைத்துள்ளார்.

இந்நிலையில், ரசிகர்கள் என்ன கேள்வி வேண்டுமென்றாலும் கேட்கலாம் என இன்ஸ்டாகிராமில் ஸ்ருதி  நேரலையில் வந்தார். அதில் ஒரு ரசிகர் ‘நீங்கள் மது அருந்த பியர், விஸ்கி, காக்டெயில் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்’ எனக் கேள்வியெழுப்பினார். 

அதற்கு ஸ்ருதி, ‘நான் நிதானமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். கடந்த 6 ஆண்டுகளாக குடிப்பதில்லை. மேலும், இந்த மது வகைகள் எதுவும் என் விருப்பப் பட்டியலில் இல்லை. எப்போதாவது ஆல்கஹால் இல்லாத பியர் குடிப்பேன்’ எனப் பதிலளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.