மாமன்னன்: மே 19-ல் வடிவேலு குரலில் முதல் பாடல் வெளியீடு
மாமன்னன் திரைப்படத்தின் முதல் பாடல் வருகின்ற மே 19-ஆம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.


மாமன்னன் திரைப்படத்தின் முதல் பாடல் வருகின்ற மே 19-ஆம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களுக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் என்கிற படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். நீண்ட நாள்களாக தயாரிப்பிலிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது.
மேலும், இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கிறார்.
இதையும் படிக்க: கர்நாடக காங். எம்எல்ஏக்கள் கார்கேவுடன் சந்திப்பு!
ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் தோற்றப் படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், ரகுமான் இசையில் வடிவேலு பாடிய பாடலை ‘முதல் சிங்கிளாக’ வருகின்ற மே 19ஆம் தேதி வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...