தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

மனதை என்னமோ செய்கிறது: வடிவேலு பாடல் குறித்து சூரி நெகிழ்ச்சி!

ஏ.ஆர். ரகுமான் இசையில் வடிவேலு பாடியுள்ள பாடலை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பதாக நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :20 மே 2023, 8:31 am

DIN

ஏ.ஆர். ரகுமான் இசையில் வடிவேலு பாடியுள்ள பாடலை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பதாக நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ளது மாமன்னன் திரைப்படம். இந்த படத்தை வெளியிட ஜூன் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 

இப்படத்தின் பின்னணி வேலைகள் இறுதிக்கட்டதை எட்டியுள்ள நிலையில், படத்தின் முதல் பாடல் நேற்று (மே 19) மாலை வெளியானது. ஏ.ஆர். ரகுமார் இசையில், யுகபாரதி வரிகளில் வடிவேலு பாடியுள்ள இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது.

Story image

ராசாக்கண்ணு எனத் தொடங்கும் இப்பாடலைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருப்பதாகவும், இப்பாடல் மனதை என்னமோ செய்வதாகவும் நடிகர் சூரி தெரிவித்துள்ளார். 

மாமன்னன் படத்தின் படங்களை தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்து சூரி இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.