மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நானி 31: சண்டைக் காட்சிகளுடன் துவங்கிய படப்பிடிப்பு! 

பிரபல தெலுங்கு நடிகர் நானியின் 31வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியதாக படக்குழு அறிவித்துள்ளது. 

News image
Updated On :14 நவம்பர் 2023, 1:25 pm

DIN

தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நானி. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் உடையவர். இவரது முந்தைய படங்களான ‘ஷியாம் சிங்கா ராய்’, ‘அடடே சுந்தரா’ திரைப்படம் அமோக வரவேற்பினைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியான 'தசரா' கலவையான விமர்சனங்களை பெற்றன. 

Story image

நானியின் 30வது படமாக 'ஹாய் நான்னா' படம் உருவாகியுள்ளது. இதில் நானியுடன் மிருணாள் தாக்குர் நடித்துள்ளார். 31வது படமாக அடடே சுந்தரா படத்தின் இயக்குநருடன் நானி இணைந்துள்ளார். அடடே சுந்தரா படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றதால் இந்தக்கூட்டணி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Story image

டிவிவி என்டர்டெர்யின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ‘சரிபோத சனிவாரம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் பிரியங்கா மோகன் நடிக்கிறார். ஏற்கனவே கேங்ஸ்டர் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. முரளி ஜி. ஒளிப்பதிவு. ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார். 

Story image

இந்தப் படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியுள்ளது. 

Story image

இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு சண்டைக்காட்சிகளுடன் தொடங்கியதாக படக்குழு தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

நானியின் ஹாய் நான்னா டிச.7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.