’நீ.. நான்.. இன்ஸ்டா’ இதயங்களை வென்ற இணையர்!
கேரளத்தைச் சேர்ந்த கணவன் - மனைவி தங்களின் இன்ஸ்டாகிராம் விடியோவால் உலகளவில் ரசிக்கப்பட்டு வருகின்றனர்.


இன்ஸ்டாகிராமில் பிரபல அனிமேஷன் திரைப்படமான ‘சுடோபியா’ (zootopia) படத்தின் காட்சித் தோற்றங்களைக் கொண்ட ரீல்ஸ் விடியோ வைரலானது. பல காதலர்கள், இணையர்கள் தங்கள் துணையுடன் இந்த ரீல்ஸில் இணைந்து நடித்து தங்கள் மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தினர்.
காதல் என்றால் இளம் வயதினருக்கானது மட்டுமா? நாங்களும் இருக்கிறோம் என சற்றும் எதிர்பாராததுபோல் கேரள மாநிலம் புனலூரைச் சேர்ந்த ‘அச்சா மாஸ்’ என்கிற இன்ஸ்டாகிராம் பெயரால் அறியப்படும் துளசிதரன் (70), ரெத்னம்மா (60) என்கிற வயதான இணையர் அந்த சுடோபியா ரீல்ஸில் நடித்து அதை வெளியிட்டனர்.
விடியோ வெளியாகி ஒரு வாரம் மட்டுமே ஆன நிலையில், அவர்களின் கணக்கின் மூலமே இதுவரை 11 மில்லியன் (1.1 கோடி) பார்வைகள் பார்க்கப்பட்டிருக்கிறது. 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கமெண்ட்கள் இடப்பட்டிருக்கின்றன.
மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்த ரீல்ஸ் விடியோ உலகம் முழுக்க பகிரப்பட்டதில் இதைக் கண்ட பலரும், ’வாழ்ந்தால் இப்படியான துணையுடன், இந்த மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்’ எனத் தங்கள் கருத்தைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: திரைப்படமாகும் எலான் மஸ்க் வாழ்க்கை!
இந்த இணைகளின் புகைப்படங்களை, விடியோவை எடுத்து அதை இன்ஸ்டாவில் பகிர்ந்து கணக்கை நிர்வகிப்பது அவர்களின் பேரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது!
பேரன்களுடன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...