லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் டிரைலர் அக். 5ஆம் தேதி வெளியானது. டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. கவனம் ஈர்க்கும் சண்டைக்காட்சிகளையும் விஜய்யின் இரு வித்தியாசமான தோற்றத்தையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அதேநேரம், டிரைலரில் விஜய் பேசிய தகாத வார்த்தையும் சர்ச்சையானது. இப்படம் அக்.19 ஆம் தேதி உலகளவில் வெளியாக உள்ளதால், படத்தின் புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும், இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையைப் பெற உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் முயன்று வருவதாகவும் அதனால் ஏற்பட்ட அரசியல் தலையீடுகள் காரணமாகவே லியோ இசைவெளியீட்டு விழா நடைபெறவில்லை என பலரும் கருத்துத் தெரிவித்து வந்தனர்.
இதையும் படிக்க: இரட்டை வேடத்தில் அஜித்?
இந்நிலையில், இக்குழப்பங்களுக்கு பதிலளிக்கும் விதமாக ரெட் ஜெயண்ட் நிறுவனம் லியோ வெளியீட்டு உரிம விவகாரத்திலிருந்து விலக்கிக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், தமிழகத்தில் லியோ தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரின் ஸ்டூடியோவே இப்படத்தை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சித்தராமையா ராஜிநாமா செய்ய காங்கிரஸ் மேலிடம் அழுத்தம்?

விடைத்தாள் மதிப்பீடு இணையதளப் பக்கம் ஹேக் செய்யப்படவில்லை: சிபிஎஸ்இ

பேயர் கிராப்சயின்ஸ் Q4 நிகர லாபம் 13% உயர்வு!
சுயநலத்திற்காக பதவியை ராஜிநாமா செய்யும் அரசியலை மக்கள் நிராகரிப்பார்கள் : சிபிஐ
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



