லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் அக்.19-ஆம் தேதி (வியாழக்கிழமை) வெளியாகவுள்ளது.
இதுவரை எந்தத் தமிழ்ப் படத்திற்கும் இல்லாத அளவிற்கு இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம், ‘லியோ டிரைலரை வெளியிட்ட பிரபல திரையரங்கத்தின் இருக்கைகளை ரசிகர்கள் உடைத்தது குறித்து உங்கள் கருத்து என்ன?’ எனக் கேள்வியெழுப்பப்பட்டது.
இதையும் படிக்க: சித்தா எந்த ஓடிடி?
அதற்கு லோகேஷ், ‘உடைக்கக் கூடாதுதான். லியோ டிரைலரை யூடியூபில் சென்சார் செய்யாமல்தான் வெளியிட்டோம். ஆனால், பாதிப்புக்குள்ளான திரையரங்கம் யூடியூப் விடியோவையே திரையிட்டுள்ளனர். இதில், எங்கள் பங்கு எதுவுமில்லை. மேலும், அதிக ரசிகர்கள் கலந்துகொண்டதால்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. லியோ இசைவெளியீட்டு விழாவை நடத்தாதற்கு இதுவும் ஒரு காரணம்” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: திரையரங்க இருக்கைகளை உடைத்தது சரியல்ல: லோகேஷ் கனகராஜ்
மேலும், “அதிக விலை கொடுத்து பிளாக்கில் டிக்கெட் வாங்கி லியோ திரைப்படத்தைப் பார்க்க வேண்டாம். நம்முடைய அன்றாட வேலைகளுக்கு நடுவே, ஒரு படத்திற்கு அவ்வளவு செலவு செய்து முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது. டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் பொறுமையாக அடுத்தடுத்த காட்சிகளில் படத்தைப் பார்க்க முயற்சி செய்யலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மூட்டு வலிக்கு என்ன செய்யலாம்?

திருநங்கைகளுக்கு இலவசப் பேருந்து பயணம்: தில்லி முதல்வர் அறிவிப்பு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 10 காசுகள் சரிந்து ரூ. 92.40 ஆக நிறைவு!

மேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! மம்தா வென்ற தொகுதியில் சுவேந்து அதிகாரி போட்டி
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

