லியோ தெலுங்கு வசூல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
லியோ தெலுங்கு வெளியீட்டின் முதல்நாள் வசூல் தொகை குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் நேற்று (வியாழக்கிழமை) வெளியானது.
தமிழகத்தில் பாதுகாப்பு காரணங்களால் அதிகாலை காட்சிக்கு மாநில அரசு அனுமதி வழங்கவில்லை. காலை 9 மணிக்குதான் முதல் காட்சி துவங்கியது.
ரசிகர்களிடம், இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. மேலும், பைரசி தளங்களில் லியோ திரைப்படம் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிக்க: எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ததா லியோ? திரை விமர்சனம்
உலகளவில் 6000 திரைகளில் வெளியான லியோ, முதல்நாளில் ரூ.115 - 125 கோடி வரை வசூலித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தமிழகத்தில் ரூ.33 கோடி வசூலித்துள்ளதாகவும் தகவல்.
இதையும் படிக்க: கமல் - மணிரத்னம் படத்தின் அப்டேட்!
இந்நிலையில், தெலுங்கு மொழியில் வெளியான இப்படம் முதல்நாள் வசூலாக ரூ.16 கோடியை வசூலித்துள்ளதாக, வெளியீட்டு உரிமையைப் பெற்ற சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
The BADASS BLOCKBUSTER ~ #LEO grosses over
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...