ஆமிர் கானின் நடிப்பில் வெளியான லால் சிங் சத்தா விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பினை பெற்றாலும் வசூல் ரீதியாக பின்னடைவை சந்தித்தது. சமீபத்தில் அவர் தனது குடும்பத்துடன் நேரம் செலவிட இருப்பதால் இனி சில ஆண்டுகளுக்கு நடிக்க போவதில்லை என கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஆமிர்கான் தனது தயாரிப்பு நிறுவனமான ஏகேபி (ஆமிர் கான் புரடக்ஷன்ஸ்) தயாரிப்பில் ‘லாகூர், 1947’ என்ற தலைப்பில் புதிய படத்தினை தயாரிக்கிறார் ஆமிர் கான். இந்தப் படத்தில் ஆமிர் கான் நடிக்கவில்லை.

ஹாட் ஸ்டார் ஓடிடியில் படத்தினை காணலாம்.
விபின் தாஸ் இயக்கத்தில் இயக்குநரும் நடிகருமான ஃபாசில் ஜோசப், தர்ஷனா ராஜேந்திரன் நடிப்பில் உருவான மலையாள திரைப்படம் ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’. விபின் தாஸ் இயக்கிய இந்தப்படம் 2022இல் வெளியாகி வசூலிலும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினையும் பெற்றது.
இதையும் படிக்க: ரஜினி 170: படக்குழு பகிர்ந்த புதிய அப்டேட்
.jpeg)
இந்தப் படக் குறித்து ஆமிர்கான், “ஹாய் விபின், இது ஆமிகான். பிரசன்னாவிடமிருந்து உங்களுடைய எண்ணை வாங்கினேன். உங்களது ஜெய ஜெய ஜெய ஹே படம் பார்த்தேன். மிக அற்புதமான படம் அது. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பல அடுக்குகளை கொண்டு நேர்த்தியாக உருவாக்கப்பட்ட படம்.
.jpeg)
அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக எழுதப்பட்டிருந்தது. அவர்களும் சிறப்பாக நடித்திருந்தார்கள். இந்த அழகான படத்தினை எடுத்ததற்கு உங்களுக்கு மிக்க நன்றி விபின். இந்தப் படம் நம்பிக்கையும் மகிழ்ச்சியையும் என இதயத்திற்கு அளித்துள்ளது. உங்களுக்கு நேரம் இருக்கும்போது சொல்லுங்கள் இது குறித்து பேசலாம். நன்றி. அன்புடன் ஆமிர் கான்” என குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார்.
பின்னர் ஆமிர்கான் - விபின் தாஸ் சந்தித்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இயக்குநர் விபின் தாஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விடைத்தாள் மதிப்பீடு இணையதளப் பக்கம் ஹேக் செய்யப்படவில்லை: சிபிஎஸ்இ

பேயர் கிராப்சயின்ஸ் Q4 நிகர லாபம் 13% உயர்வு!
சுயநலத்திற்காக பதவியை ராஜிநாமா செய்யும் அரசியலை மக்கள் நிராகரிப்பார்கள் : சிபிஐ

குவாலிஃபையர் 1: ரஜத் படிதார் அதிரடி; குஜராத் டைட்டன்ஸுக்கு இமாலய இலக்கு!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



